சக நடிகர்களை வளர்த்து விட்ட 6 ஹீரோக்கள்-விவரம் உள்ளே
பொதுவாக சினிமாவை பொறுத்தவரையில் போட்டி இருக்கும். ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் போட்டி இருந்தால் மட்டுமே அவர்களால் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வர முடிகிறது. ஆனாலும் தன்னுடைய சக நடிகர்களை தூக்கிவிட வேண்டும் என்பதற்காக 6 ஹீரோக்கள் பல உதவிகள் செய்துள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
சிம்பு : ஒரு கட்டத்திற்கு சினிமாவில் சந்தானத்திற்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தாலும் ஆரம்பத்தில் தன்னை காமெடி நடிகராக நிலைநாட்ட பல கஷ்டங்கள்பட்டார். அப்போது தான் சிம்பு தன்னுடைய படங்களில் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்தார். அவ்வாறு வல்லவன், மன்மதன் போன்ற சிம்புவின் பிளாக்பஸ்டர் படங்களில் சந்தானம் நடித்திருந்தார்.
விஜய் சேதுபதி : காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமான பாபி சிம்ஹா மக்களால் அறியப்படும் ஹீரோவாக வருவதற்கு விஜய் சேதுபதி முக்கிய காரணம். அதாவது தன்னுடைய பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களில் பாபி சிம்ஹாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருந்தார். அதன் பிறகு தான் ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக ரசிகர்களை பாபி சிம்ஹா மிரட்டி இருந்தார்.
வெங்கட் பிரபு : வெங்கட் பிரபு பொதுவாக கலகலப்பான படங்களை எடுக்கக்கூடியவர். அந்த வகையில் சென்னை 600028 படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் தன்னுடைய தம்பி பிரேம்ஜியை வெங்கட் பிரபு தான் வளர்த்து விட்டார். அதேபோல் நடிகர் வைபவையும் தனது படங்களில் மூலம் வளர்த்து விட்டார் வெங்கட் பிரபு.
கே எஸ் ரவிக்குமார் : இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பல உச்ச நட்சத்திரங்கள படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சரவணனுக்கு வாழ்வு தந்தது இவர்தான். அதாவது பொண்டாட்டி ராஜ்ஜியம் என்ற படத்தின் மூலம் சரவணனை ஹீரோவாக்கி அழகு பார்த்தார் கே எஸ் ரவிக்குமார். அதன் பிறகு தான் சரவணன் பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
சந்தானம் : சிம்பு எப்படி சந்தானத்தை வளர்த்து விட்டாரோ, அதேபோல் சந்தானம் உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் வளர்த்து விட்டார். உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் தொடங்கி பல படங்களில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். உதயநிதியை விட இவருக்கு தான் அந்த படத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கும். அந்த படங்கள் வெற்றி பெற அதன் பிறகு உதயநிதி ஒரு ஹீரோ அந்தஸ்துக்கு உண்டான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தனுஷ் : சின்னத்திரை மூலம் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்த சிவகார்த்திகேயனுக்கு பக்கபலமாக இருந்தது தனுஷ் தான். அதாவது எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற சிவகார்த்திகேயனின் படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தனுஷ் தயாரித்திருந்தார். கடைசியில் வளர்த்த கெடா மாரில் முட்டுவது போல தனுஷை சிவகார்த்திகேயன் எதிர்த்து நின்றார்.