23 வருடங்களின் பின்னர் ஜெர்மனி செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி!

#France #world_news
Mayoorikka
9 months ago
23 வருடங்களின் பின்னர் ஜெர்மனி செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஜெர்மனிக்கு பயணமாக உள்ளார்.

 கடந்த 23 ஆண்டுகளின் பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி ஒருவர் உத்தியோகபூர்வமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

 வரும் ஜூலை 2 தொடக்கம் 4 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 ஜெர்மனிய ஜனாதிபதி Frank-Walter Steinmeier இனைச் சந்தித்து உரையாக உள்ளார். அண்மைய நாட்களில் பல்வேறு காரணங்களினால் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனை சரி செய்து, ‘பிரான்ஸ்-ஜெர்மனி’ நட்புறவில் புதிய அத்தியாயத்தை தொடங்க இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த பயணத்தின் போது, பிரான்ஸ்-ஜெர்மனிக்கு இடையே போடப்பட்ட ‘Traité de l'Élysée’ ஒப்பந்தத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு நாளும் கொண்டாடப்பட உள்ளதாக அறிய முடிகிறது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு