IPL Match55 - 168 ஓட்ட இலக்கை எதிர்த்து களமிறங்கியுள்ள டெல்லி அணி

#Delhi #IPL #T20 #Chennai
Prasu
3 years ago
IPL Match55 - 168 ஓட்ட இலக்கை எதிர்த்து களமிறங்கியுள்ள டெல்லி அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

சென்னை அணியில் அம்பதி ராயுடு நீக்கப்பட்டு, ஷிவம் துவே ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மணீஷ் பாண்டேவுக்கு பதில் லலித் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 25 ரன்கள் சேர்த்தார். 

ருதுராஜ் 24 ரன், ரகானே 21 ரன், அம்பதி ராயுடு 23 ரன், ஜடேஜா 21 ரன் அடித்தனர். 8வது வீரராக களமிறங்கிய கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

 இதையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களமிறங்குகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4