தாடி பாலாஜி மனைவி நித்தியாவின் மீது போலீஸ் புகார்!

#India #Cinema #Tamil Nadu #TamilCinema
Mani
1 year ago
தாடி பாலாஜி மனைவி நித்தியாவின் மீது  போலீஸ் புகார்!

நடிகர் தாடி பாலாஜி இவர் திரைப்படங்கள் மற்றும் சின்ன திரையில் காமெடி நட்சத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இவர்களிடையே பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர் இருவரும்.

 இந்நிலையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பாலாஜியின் மனைவி நித்தியா மீது இளைஞர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சென்னையில் உள்ள மாதவரம் பிபிசி நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் இவர் அங்குள்ள ஒரு கடையில் பணியாற்றி வருகிறார் சில மாதங்களுக்கு முன்பு கலைச் செல்வன் புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

 இதைத்தொடர்ந்து மாதவரம் சாஸ்திரி நகரில் வசித்து வரும் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூபாய் 94 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார்.  அதில் 52 ஆயிரம் ரூபாய் திருப்பி கொடுத்ததாகவும் 42 ஆயிரம் ரூபாய் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகரின் மனைவி நித்யாவுக்கும் கலைச்செல்வனுக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வண்ணம் உள்ளது.

 இதைத்தொடர்ந்து கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டதாக தெரிகிறது அவ்வப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறி ஒருவர் ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.   இதில் காயமடைந்து இருவரும் குளத்தில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்று புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கலைச்செல்வன் வீடு திரும்பினார்.

 இதைத்தொடர்ந்து மாதவரம் போலீஸ் நேரில் சென்று இவரிடம் விசாரணை நடத்தினர் நித்தியாவும் கலைச்செல்வம் தனித்தனியாக போலீசில் புகார் அளித்துள்ளனர், அவர்கள் இருவரது புகாரை பெற்றுக்கொண்டு போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நித்தியா எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு ஆசிரியர் கார் கண்ணாடியை உடைத்ததாக மாதவரம் போலீஸ் நிலையத்தில் புகார் எழுந்த நிலையில் இந்த புகார் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!