முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் – ஜனாதிபதி ஆணைக்குழு கோரி 10,000 கையெழுத்து வேட்டை!

#SriLanka #Mullaitivu #Lanka4 #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Commission
Abi
1 hour ago
முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் – ஜனாதிபதி ஆணைக்குழு கோரி 10,000 கையெழுத்து வேட்டை!

1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமது சொந்த இடங்களில் முழுமையாக மீள்குடியேற முடியாத நிலை தொடர்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கான காணி மற்றும் வீட்டுவசதிகளை வழங்கி மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், தமது கோரிக்கைகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 10,000 கையெழுத்துகளைத் திரட்டும் நடவடிக்கை இன்று முல்லைத்தீவு பள்ளிவாசல்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலவும் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு அரசாங்கம் தலையிட்டு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4