சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்க! என சுரேஷ் ரெய்னா ட்வீட்

#IPL #Cricket #IPL2023 #Sports News
Mani
3 years ago
சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்க! என சுரேஷ் ரெய்னா ட்வீட்

ஐபிஎல் தொடரின் 55வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி சார்பில் பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றியை சி.எஸ்.கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் பாராட்டியுள்ளார். "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்க!. டெல்லி கேபிடல்ஸை தோற்கடித்து என்ன ஒரு அற்புதமான விளையாட்டை சென்னை அணி வெளிப்படுத்தியுள்ளது. விளையாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் தங்கள் திறமையை வெளிப்படுத்திய சி.எஸ்.கே சிங்கங்கள் மைதானத்தில் கர்ஜித்தன. இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி, தொடர்ந்து முன்னேறுங்கள்"- என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4