AI CHATBOT க்கு பதிலாக கூகுளினால் வெளியிடப்பட்ட Google Bard AL

#SriLanka #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
1 year ago
AI CHATBOT  க்கு பதிலாக கூகுளினால் வெளியிடப்பட்ட  Google Bard AL

இணைய உலகை தலைகீழாக புரட்டிப்போடும் அளவுக்கு உயர்ந்துள்ள conversational generative AI chatbot தொழில்நுட்பத்தில் இதுநாள் வரையில் மைக்ரோசாப்ட் முதலீட்டில் இயங்கி வந்த ChatGPT மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில்..

கூகுள் பல வருடங்களாக மிகவும் சைலென்டாக உருவாக்கி வந்த இத்தொழில்நுட்பத்தை ChatGPT அறிமுகத்திற்கு பின்பு வேகப்படுத்தி சுந்தர் பிச்சை பெரும் கனவுடனும், இலக்குடனும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த AI CHATBOT தளமான Google BARD அமெரிக்காவில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது 180 நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

 கூகுள் நிறுவனத்தின் மிகவும் முக்கியமான வருடாந்திர கூட்டமான Google I/O நிகழ்ச்சி கலிப்போர்னியா தலைமை அலுவலகத்தில் நடந்தது. 

இக்கூட்டத்தில் கூகுள் தனது BARD சேவையை இந்தியா உட்ப்ட உலகின் 180 நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தது. 

 AI மாடல் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நிலையில் இதை மக்கள் நேரடியாக பயன்படுத்துவதற்கான தளத்தை அளிக்கும் மிகப்பெரிய வாய்ப்பையை கூகுள் பெற்றுள்ளது என annual developer conference ஆந Google I/O கூட்டத்தில் கூகுள் CEOசுந்தர் பிச்சை தெரிவித்தார்.

கூகுள் பார்ட் தற்போது 180 நாடுகளில் மக்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்த முடியும், இதை தாண்டி ஜப்பானீஸ் மற்றும் கொரியன் மொழியிலும் மக்கள் இதை பயன்படுத்த முடியும்.

 விரைவில் 40க்கும் அதிகமான மொழியில் கூகுள் பார்ட் பயன்படுத்துவதற்காக மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக Google Assistant பிரிவு தலைவர் Sissie Hsiao இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

 BARD தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், முன்பை விடவும் தப்போது சிறப்பாக பதில்களை பல வழிகளில் அளிக்க தயாராகியுள்ளது. 

ஒட்டுமொத்த கூகுள் BARD தளமும் PaLM 2 என்ற கட்டமைப்பில் இயங்கி வருகிறது, PaLM 2 என்பது கூகுள் உருவாக்கியுள்ள புதிய large language model (LLM). இதை விட முக்கியமாக கூகுள் உருவாக்கிய PaLM 2 தற்போது அனைத்து டெக் டெவலப்பர்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது