சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு 87.33% மாணவர்கள் தேர்ச்சி!

#India #exam #Breakingnews
Mani
1 year ago
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு 87.33% மாணவர்கள் தேர்ச்சி!

நாடு முழுவதும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடத்தப்பட்டது. மேலும், பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். 

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் குழப்பம் நிலவிய நிலையில், இன்று சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தேர்ச்சி விகிதம் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் முந்தைய விகிதமான 83.40 ஐ விட அதிகமாக உள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

 சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் 16,60,511 மாணவர்கள் தேர்வெழுதினர், அவர்களில் 14,50,174 பேர் தேர்ச்சி பெற்றதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

 சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று மாணவர்கள் அணுகலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

 சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97.40% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!