சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஏ.வி.எம். நிறுவனம்

#Cinema #AVM Productions #TamilCinema
Mani
3 years ago
சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஏ.வி.எம். நிறுவனம்

புகழ்பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனமான, ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் இதுவரை 178 படங்களை தயாரித்து இருக்கிறது. 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரையும் தயாரித்து உள்ளது. 2014-ம் ஆண்டு 'இதுவும் கடந்து போகும்' என்ற படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்திருந்தது. அதன்பிறகு பட தயாரிப்பில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் ஏ.வி.எம். உரிமையாளர் அருணா குகன் கூறுகையில், "புகழ்பெற்ற ஏ.வி.எம். நிறுவனம் சார்பில் மீண்டும் படங்களை தயாரிக்க இருக்கிறோம். நல்ல கதைகள் கேட்கப்பட்டு வருகிறது. விரைவில் நிறுவனம் மீண்டும் படங்கள் தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்து ஏ.வி.எம். நிறுவன தமிழிலும், இதர மொழிகளிலும் படங்கள் தயாரிக்கப்படும்.

எத்தனையோ பேருக்கு நடிப்புக்கான கல்விச்சாலையாக விளங்கிய எங்கள் நிறுவனம் மீண்டும் அந்த பயணத்தை தொடர இருக்கிறது. விரைவில் ஏ.வி.எம்.-ன் பிரத்தியேக 'சவுண்ட்' மீண்டும் திரையில் ஒலிக்கும்" என்றார். ஏ.வி.எம்.சரவணன் தற்போது வயது மூப்பு காரணமாக ஓய்வு எடுத்து வருவதால், அவரது மகன் எம்.எஸ்.குகன் நிர்வாக பணிகளை செய்து வந்தார். இப்போது எம்.எஸ்.குகனின் மகள் அருணா குகன் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளை முழு நேரமாக கவனித்து வருகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4