பதவி விலகாத ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை: ஜனாதிபதி செயலகம்

#SriLanka #NorthernProvince #Governor
Mayoorikka
3 years ago
பதவி விலகாத ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை: ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நான்கு மாகாண ஆளுநர்களையும் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யாவிட்டால் , அவர்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கருத வேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதற்கு மேலதிகமாக நீதிபதி தலைமையில் குழுவொன்றை நியமித்து குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ஆளுநர்களை பதவி நீக்கம் செய்தல், வேறு நபர்களை ஆளுநர் பதவிக்கு நியமித்தல், பணம் வழங்காமை போன்றவற்றிலும் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளது. 

 ராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகத் தயாரில்லை, எனவே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு ஆலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி பதவி விலகி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போது ஆளுநர்கள் பதவி விலகுவது வழமையான மரபு எனவும், பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவையை கலைப்பது போன்று எனவும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்படி சம்பிரதாயத்திற்கு அமைவாக ஆளுநர்கள் பதவி விலகாததால், அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவதற்கு ஜனாதிபதி சிறிது காலம் காத்திருந்ததாக ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4