பிரான்ஸில் தங்குமிடம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 அகதிகள் கைது

#Arrest #France #Protest #Refugee
Prasu
1 year ago
பிரான்ஸில் தங்குமிடம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 அகதிகள் கைது

பிரான்ஸில் 15 பேர் வரையான அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக அகதிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று கண்டனம் வெளியிட்டுள்ளது. தங்குமிடம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு பரிசில் உள்ள நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக குவிந்த 150 வரையான அகதிகள், ‘அவசரகால தங்குமிடம்’ கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது ஆர்ப்பாட்டம் பொது போக்குவரத்தினை பாதித்ததாக தெரிவிக்கப்பட்டு அவர்களில் 15 அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

 அகதிகள் கைது செய்யப்பட்டமைக்கு Nikolaï Posner எனும் அகதிகள் நல தொண்டு நிறுவனம் ஒன்று கண்டனம் வெளியிட்டுள்ளது. கைக்குழந்தைகளோடு இருந்த பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!