அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய காலநிலை காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம்

#SriLanka #weather #Rain
Kanimoli
3 years ago
அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய காலநிலை  காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதற்கிடையில், மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மோகா’ சந்தா சூறாவளி, தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நாளை பிற்பகல் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 எவ்வாறாயினும், மீனவ மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகத்தினர் 5 முதல் 20 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 82 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் மீள் அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4