புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

#SriLanka #kanchana wijeyasekara #petrol
Kanimoli
3 years ago
புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சட்டத்தினை தயாரித்த பிறகு, அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர்கள் மற்றும் மறுசீரமைப்பு நிபுணர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4