யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில்

#SriLanka #Arrest #Court Order #Prison #kandy #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில்

பதுளை, கொஸ்லந்த உடுடியலும வனப்பகுதியில் கூடாரம் அடித்துக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த சந்தேக நபர்கள் இன்று பண்டாரவளை நீதவான் கே ஜீவ்ராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொஸ்லந்த உடடியலும சரணாலயத்திற்குள் பிரவேசித்தல், காடுகளை சுத்தப்படுத்துதல், அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா வழிகாட்டிகளாக வேடமிட்டமை, உடடியலும பிரதேசத்தில் இளைஞன் மற்றும் யுவதியை பாதுகாப்பின்றி இரவைக் கழிக்க அனுமதித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொஸ்லந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

 ஹப்புத்தளை மற்றும் பூனாகலையைச் சேர்ந்த 24 மற்றும் 33 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4