புதிய தொழில் முயற்சியில் இறங்கிய காஜல் அகர்வாலுக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்துள்ளன.
தமிழில் பழனி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் காஜல் அகர்வால். மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சாலுவை மணந்தார், அவர்களுக்கு இப்போது ஒரு மகன் உள்ளார்.
காஜல்அகர்வால் தனது சொந்த அழகு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தாண்டி முன்னேறியுள்ளார். அவரது ஐலைனர் நிறுவனத்தின் திறப்பு விழாவின் போது, அவரது கணவர் கௌதம் கிச்சாலு அவரை வரவேற்றார்.
கணவரின் உதவி இல்லாமல், இந்த நிறுவனத்தை தன்னால் தொடங்க முடியாது என்று காஜல் அகர்வால் கூறினார். காஜல் அகர்வால், தொழில்முனைவோராக களமிறங்குவதற்கு இணையதளத்தில் சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளார்.