புதிய உத்தேச பயங்கரவாத சட்டம் தொடர்பில் கந்துரையாடல்!

#SriLanka #Vavuniya
Mayoorikka
3 years ago
புதிய உத்தேச பயங்கரவாத சட்டம் தொடர்பில் கந்துரையாடல்!

புதிய உத்தேச பயங்கரவாத சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் வவுனியா தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்றது.

 இதன்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள உத்தேச பயங்கரவாத சட்டத்தினால் பிரஜை ஒருவருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், அது கையாளப்படும் விதம், போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வளவாளர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவர் கோசலா மதன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

 இக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4