பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் சாதாவின் நிச்சயதார்த்த விழாவில் நண்பர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து
நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா நீண்டகாலம் காதலித்து வந்தனர். எனினும், இதனை அவர்கள் வெளியே தெரிவிக்காமல் இருந்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றாக காணப்பட்டனர்.
அவர்கள் திருமணம் செய்து கொண்டார்களா? என்று ரசிகர்கள் உட்பட பலரது மனதில் கேள்வியாக இருந்தது, ஆனால் இன்று அந்த சந்தேகம் ஓய்ந்துவிட்டது. இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் டெல்லியில் உள்ள கபுர்தலா இல்லத்தில் நடைபெற்றது.
இரு வீட்டார், தங்கள் நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் கலந்து கொண்ட நிகழ்வில் அனைவருக்கும் முன்பாக மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
பின்னர், தம்பதியினர் தங்கள் விழாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அவர்கள் வெள்ளை உடை அணிந்திருந்தனர். அவர்களுக்கு திரையுலகினர், நண்பர்கள், தலைவர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.
ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா, பூமி பட்நாகர், நேஹா தூபியா, கனிகா கபூர், மனிஷ் மல்ஹோத்ரா, கபில் சர்மா மற்றும் பலர் உட்பட திரையுலகில் உள்ள தனது நண்பர்களிடமிருந்து பரினீதி வாழ்த்துகளைப் பெற்றார்.
லண்டனில் ஒன்றாகப் படிக்கும் இந்த ஜோடி நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்தும் தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த மார்ச் மாதம், ஆம் ஆத்மி எம்பி சஞ்சீவ் அரோரா அவர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், முன்னாள் மராட்டிய அமைச்சர் ஆதித்யா தாக்கரே, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பிற தலைவர்கள் நேரில் கலந்து கொண்டனர்.