தீபாவளிக்கு வெளியாகிறது ’ஜிகர்தண்டா 2’- படக்குழு அறிவிப்பு

#Cinema #TamilCinema #Tamil People
Mani
3 years ago
தீபாவளிக்கு வெளியாகிறது ’ஜிகர்தண்டா 2’- படக்குழு அறிவிப்பு

பிரபல இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம், ஜிகர்தண்டா. சித்தார்த் நாயகனாக நடித்திருந்த இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். நடிகர் பாபி சிம்ஹா கேங்ஸ்டராக மிரட்டிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

images/content-image/1684159999.jpg

இதனையடுத்து ஜிகிர்தண்டா படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், அன்றைய தினம் ஜிகிர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனே இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது, மிரட்டலாக வெளியான இந்த டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் இந்தப்படத்தின் அப்டேட்டானது இன்றைய தினம் 4 மணிக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். 4 மணி தாண்டியும் எந்த அப்டேட்டும் வெளியாக நிலையில், தற்போது அந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4