முறையாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் ஒத்துழைப்போம்: சஜித்

#SriLanka #Election #Sajith Premadasa
Mayoorikka
3 years ago
முறையாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் ஒத்துழைப்போம்: சஜித்

பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு செய்திகளை கட்டமைக்காமல் முறையாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால், அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15) கூடிய எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அரசாங்கம் தாம் நினைக்கும் நேரங்களில், தாம் நினைக்கும் விதத்தில் தமது காலக்கெடுவுக்கு ஏற்ற வகையில் தேர்தல் வரைபடத்தை உருவாக்குவது ஜனநாயகச் செயல் அல்ல என்றார்.

 ஜனாதிபதியோ அல்லது அவருக்கு ஆதரவானோரின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் வரைபடத்தை தயாரிப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டினார். ஆனால் அரசாங்கம் கொண்டுவருவதற்கு தயாராக உள்ள, ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக நடத்தும் பிரேரணையை எதிர்கட்சியாக முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

 அதனை விரைவில் நடத்துவதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுவருவதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பை நல்குவதாகவும்,ஜனாதிபதித் தேர்தல் சவாலை ஏற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 அதேபோல், எதிர்க்கட்சிகளின் சகல அரசியல் சக்திகளையும் பயன்படுத்தி தேசிய கொள்கைகள் மற்றும் தேசிய அபிலாஷைகளை மையமாகக் கொண்ட பயணத்திற்கு தயார் என்றார்.

 பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு செய்திகளை கட்டமைக்காமல் முறையாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால், அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்பை வழங்குவதாக குறிப்பிட்டார்.

 மேலும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியொருவரின் கீழ் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் இழுதடிப்புச் செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதாக மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4