இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

#SriLanka #Afghanistan #Cricket
Prasu
3 years ago
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.

தொடரில் முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2-ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி ஜூன் 4-ம் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி ஜூன் 7-ம் தேதியும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்:

  • ஹஷ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மத்துல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரான், ரியாஸ் ஹசன், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகைல் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அமகது, அப்துல் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, பரித் அகமது மாலிக்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4