ஐரோப்பிய பயணத்தால் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும் , அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது - ஜெலன்ஸ்கி

#France #Weapons #Ukraine #War
Prasu
1 year ago
ஐரோப்பிய பயணத்தால் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும் , அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது - ஜெலன்ஸ்கி

ரஷியாவுக்கு எதிரான போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வருகின்றன.

இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

இந்த பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைனுக்கு ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதியளித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜெலன்ஸ்கி, ரெயிலில் கீவ் நகருக்குச் சென்றார். அப்போது ரெயிலில் இருந்தபடியே அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் மூலம் உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!