10 ஆண்டுகளுக்கு பிறகு தரம்ஷாலாவில் ஐபிஎல் போட்டி PBKS vs DC

#IPL #sports #IPL2023 #Sports News
Mani
3 years ago
10 ஆண்டுகளுக்கு பிறகு தரம்ஷாலாவில் ஐபிஎல் போட்டி PBKS vs DC

தர்மஷாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் கிங்ஸ் இந்த சீசனின் 6-வது வெற்றியைப் பதிவுசெய்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டும் நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது.

அதே நேரத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் இதுவரை 8-போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், இந்த சீசனில் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இன்றைய போட்டியில் டெல்லி வெற்றிபெற்றால் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கேள்வி குறி ஆகிவிடும்.

மேலும், இந்த இரண்டு அணிகளும் கடைசியாக சந்தித்தபோது, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மேலும், இந்த மைதானம் பஞ்சாப் அணி வீரர்களுக்கு பிடித்த மைதானம் என்பதால் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு பூஜ்ஜியத்தில் உள்ளது என்பதால் போட்டி தடையின்றி நடைபெறும் என எதிர்பார்க்கலாம். மேலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு தரம்ஷாலாவில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4