சத்குரு ஸ்ரீ சரவண பாபா தொடர்பில் அவதூறு: நடவடிக்கை எடுக்க போவதாக எச்சரிக்கை

#London #England
Mayoorikka
1 year ago
சத்குரு ஸ்ரீ சரவண பாபா தொடர்பில் அவதூறு: நடவடிக்கை எடுக்க போவதாக எச்சரிக்கை

இங்கிலாந்தில் வசிக்கும் சத்குரு ஸ்ரீ சரவண பாபா தொடர்பில் சில ஊடகங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

 20வயது ஈழத்தமிழ் பெண் ஒருவருக்கு தவறான வீடியோக்கள் அவரால் அனுப்பப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சத்குரு ஸ்ரீ சரவண பாபாவின் வளர்ச்சியை பிடிக்காத ஒருசிலர் தமது காழ்ப்புணர்வை குறித்த செய்தியின் ஊடாக தெரிவித்துள்ளனர். உண்மையில் அவர், ஓம் சரவணபவா சேவா அறக்கட்டளை மூலம் வறிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் கல்வி வசதி போன்ற பல உதவிகளை செய்து வருகின்றார்.

 ஓம் சரவணபவா சேவா அறக்கட்டளை மூலம் இந்தியாவிலும் இலங்கையிலும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்தனர்.

 சரவண பாபா சமூக மையத்தின் பல தன்னார்வ தொண்டர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு இவ்வாறான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு ஈழத்தில் உள்ளவர்களுக்கும் இந்தியாவில் உள்ள வறிய மக்களுக்கும் பல்வேறு வாழ்வாதார உதவிகளை செய்து வரும் சத்குரு ஸ்ரீ சரவண பாபா இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபட மாட்டார் என்பது யாவரும் அறிந்ததே.

 எனவே அவரின் வளர்ச்சியை பொறுக்காத ஒரு சிலர் அவர் தொடர்பில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

 சில ஊடகங்கள் பரபரப்பிற்காவும் தங்களுக்கு பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் குறித்த செய்திகள் தொடர்பில் எந்தவித விசாரணையும் இல்லாமல் தமது வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாறான செய்திகளை பரப்புகின்றனர் எனவும், சரவண பாபா அவர்களினை தப்பாக சித்தரிக்கும் நோக்கத்திலேயே இந்த காணொளி பிரசுரிக்கப்பட்டதாகவும் இந்த அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர், 

 அது மட்டுமன்றி வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!