மறப்பானா தமிழன் முள்ளிவாய்க்காலை உயிர் உள்ளவரை
தமிழர் இதயத்தில் ஆறாத்துயர் கொடுத்தது முள்ளிவாய்க்கால்
நம் வலியை எப்படித்தான் உணத்துவது உலகிற்கு
உண்ண வழியின்றி உலர்ந்து மடிந்த நாட்கள் எத்தனை நம்மூரைக் கரைத்து காணாமலாக்கப்பட்டவர்கள் எத்தனை: அவர்கள் எங்கே என்று கேட்டோம்
கண்டது கண்ணீர் மட்டுமே சேயை காக்கத் தவித்த தாயின்வேதனை உணர்ந்தோம்
தாயின் மடியில் மழலையின் அபலக் குரல் கேட்டோம்
மரணத்தை தேடியோடிய நம் வயோதிபரையும் கண்டோம்
காத்தவை காக்கும் பணியில் மாவீரர்கள் பலர் மரித்தும்
மறைந்தானோ காவலன்
எதையிழந்தும் எம் தமிழ்த்தாயின் உணர்வை இழக்கவில்லையேயாம்
உலக்கைக் கெஞ்சினோம் சட்டரீதி கோரினோம் சமூக நிதியும் கேட்டோம்
கிடைத்தது ஏமாற்றம் மட்டும்தான் கொலைகாரர்கள் எத்னை பேர், ஆட்சியை
ஆண்டவனிலிருந்து அனைவரும் துரோகிகளே, இருந்தும் தொடர்கிறது தமிழின
அழிப்பு ஈரேழு வருடங்களில் எத்தனை மாற்றங்கள் மன்னாரில் மண்மறைய
சிவனை மறைத்து புத்தர் தோன்ற பாவம் புத்தர் சிவனுடன் போட்டி ஈழத்தில்
தமிழனுக்கு மட்டுமா சோதனை இறைவனுக்கு மட்டும் தான் எம்முயிரை
அழிக்கலாம், அழிக்கமுடியுமா உலகின் முத்த தமிழை முடியுமா தமிழரின்
சுதந்திரத்தாகத்தையும், வேட்க்கையையும் நகர்த்த மறைந்தவன் தோன்றிட
ஏங்கித் தவிக்கிறது தாயகம், ஈசனின் நண்பனும் திலகமிட்ட மாமனும்
துணைநிற்க வேலவன் முன்செல்ல அம்மனவள் சிற்றம் கொள்ள மறைந்தவன்
தோன்றினால் வேங்கைகளும் சீறிப்பாயும், நந்தியும் கொந்தளிக்கும் நந்தி
கொந்தளிக்க வாய்க்கால் கரைபுரண்டோட, இரத்தக்கறை முளையாகி
வேர்விட்டு மரமாகி தாய்தமிழும் சிறகடிக்கும், விரத்தமிழர்களே வெந்துபுலம்பும்
காலமல்ல இது, விறுகொண்டெழுந்து, அந்நியனை விரட்டி தமிழ்த்தாயைக்
காக்கும் காலமிது
தயத்தமிழே வருகிறோம் உன்னை மீட்க