லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

#Cinema #Actor #TamilCinema #Director
Mani
3 years ago
லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் ‘லால் சலாம்’. மேலும், ரகுமான் இசையமைக்கும் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மொய்தீன் பாய் கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டுச் சென்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகக்ளை குவித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4