வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்வானந்த் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.

#Cinema #Actor #Marraige
Mani
3 years ago
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்வானந்த் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.

தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

சில காரணங்களால் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டதாக கடந்த சில நாட்களாக தெலுங்கு இணையதளங்களில் பரபரப்பான செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், சர்வானந்தின் நெருங்கிய குடும்ப நண்பர் இந்த கூற்றை மறுத்துள்ளார், லண்டனில் 40 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு சர்வானந்த் ஹைதராபாத் திரும்பியுள்ளார் என்றும் திருமண ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறினார். இந்நிலையில், நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.

திருமண தேதியை அறிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சர்வானந்த். அவருக்கும் ரக்‌ஷிதா ரெட்டிக்கும் ஜூன் 3-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், இதனால் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4