ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#Actor #TamilCinema #Tamilnews
Mani
3 years ago
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று தீர்ப்பு குறித்து நீதிபதிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உள்ளதாகவும், போட்டிகள் தொடர்பாக மாநில அரசு அளித்துள்ள ஆவணங்கள் திருப்திகரமாக இருப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு செய்துள்ள திருத்தம் சட்டத்துக்கு உட்பட்டது, எந்த அடிப்படை உரிமைகளையும் மீறவில்லை. எனவே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அரசாணை திட்டமிட்டபடி தொடரும்.

இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து நடிகர் சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4