ஆன்மீகம் என்றால் வெறும் பூஜை வழிபாடுகள் மட்டுமல்ல. பொது தொண்டே நிறைவு தரும். சுவிஸ் சக்தி சுரேஷ்.
அன்னையின் அருள் வாக்கு ஆணைப்படி 1974ஆம் ஆண்டு சித்தர் பீடத்தின் வாசல்முகப்பில் ஓம்சக்தி மேடை நிறுவப்பட்டது. அன்னையின் சூலமும், அதில் ஒம் சக்தி என்னும் மூலமந்திரமும் தனிமேடையில் நிறுவப்பட்டுள்ளதால் இது ஓம் சக்தி மேடை என அழைக்கப்ப்படும். இதனை மூன்று முறை வலம் வந்த வணங்கிய பிறகே ஆலயத்துக்குள் செல்லவேண்டும் .
அங்கு சப்தகன்னிகள் சன்னிதி நாகபீடம் , தலவிருட்ஷம் வேப்பமரம் என வணங்கி மூலஸ்தானமான கருவறைசென்று வழிபடுவது முறையாகும் அத்தோடு ஆடவர் பெண்கள் பிள்ளைகள் என குளித்து ஈருடையுடன்வந்து அங்கவலம் வந்தால் தீராத கர்மநோய்களை நீக்கிவைக்கிறாள் அன்னை! பங்காரு பாலகனும்நானே பலாசக்தியும்நானே நீ எந்தக்கடவுளிடம்போய் கோரிக்கை வைத்தாலும் அதை ஈற்றில் நிறைவேற்றித்தருபவள் நானே என்கிறாள் அன்னை ஆதிபராசக்தி.
இங்கு நவக்கிரங்களுக்கு எனதனியாக சந்நிதி இல்லை. அத்தோடு நவக்கிரகங்கள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் பரம் பொருளாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தியே ஆதலால் இங்கு நவக்கிரங்களுக்கென தனியாக சந்நிதி இல்லை. அதற்குப் பதிலாகவே ஓம் சக்தி மேடை அமைக்கப்பட்டுள்ளது. இவ் ஆச்சார்யபீட நாயகரான அருட்திரு பங்காரு அடிகளார் மேல் மருவத்தூரில் கல்விச்சாலைகள் ,மருத்துவமனைகள் இரயில்நிலையம் பேரூந்துநிலையம் எனப்பல மக்கள் நலப்பணிகள் அமைத்துதால்.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர்பீடத்தைச்சுற்றி 40 க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் பயனடைந்து வருகின்றனர் . அதுமட்டுமின்றி தன்பக்தர்கள்மூலமும், அறப்பணி அமைப்புக்களை நிறுவி இந்தியாவில் மட்டுமில்லாமல் இலங்கை மற்றும் உலகமெங்கும் ஆன்மிகத்தோடு அறப்பணியாக மக்கள் சேவையை செய்யவைக்கிறார் அம்மா எனும் அருட்திரு பங்காரு அடிகளார் .
இதை பின்பற்றி உலகின் சொர்ணபூமியான சுவிற்சர்லாந்தில் 1994 ம் ஆண்டிலிருந்து வாரத்தில் குருநாளான ஒவ்வொரு வியாழக்கிழமையும் , செவ்வாய்க்கிழமையும், மற்றும் பௌர்ணமி அமாவாசை விசேடதினங்கள் என தமது பூஜை வழிபாடுகளை மிகச்சிறப்பாகத் தாய்மொழியான தமிழ்மொழியில் முழு விளக்கத்தோடு செய்துவருகிறார்கள் சுவிஸ் செவ்வாடை சக்திகள் அதுமட்டுமின்றி உபயகாரர்களே கணவன் மனைவி பிள்ளைகளோடு பூசைக்கமர்த்தப்பட்டுபூசை செய்விக்கப்படுகின்றனர் .
ஆன்மிகத்தில் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் தரகர் ஏன் என்ற கேள்விக்கு விடையளிக்குமுகமாக அங்கு வரும்பக்தர்களே ஆதி பராசக்திக்கும் அடிகளார்க்கும் தொண்டு ,பூசை,அபிடேகம் வழிபாடு அர்ச்சனை ,வேள்வி (நாகம் )கலச விளக்கு பூசைப் பயணிகளையும் முன்னின்று பெரு விருப்போடு நடத்துகிறார்கள் . அந்தவகையிலே சுவிஸ்சர்லாந்து மண்ணிலே 28 ஆண்டுகாலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் விரும்பி செவ்வாடையணிந்து அமைதியாகவும் பக்திநெறி பிறளாமலும் வியத்தகு மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதி பராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு வாரவழிபாட்டு மன்றங்கள் பேர்ன் சூரிச் லசட்பொன் போன்ற இடங்களில் அமைந்து சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
ஆன்மிகமன்றங்கள் வெறும் பஜனை மடங்களாக மட்டும் இருத்தல் கூடாது ; மாறாக வாழ வழியில்ஙாதவர்களுக்கு பக்திநல்நெறியோடு வாழ வழிகாட்டும் செவ்வாடை இயக்கமாக இருக்கவேண்டும் என்ற அம்மாவின் அருட் கோரிக்கைக்கு உலகில் முன்னுதாரணமான ஆன்மிக இயக்கமாக இருப்பது மிகவும் சிறப்பாகும் .
சுவிஸ் மன்றத்தைப் பார்த்து நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள் என அருட்திரு பங்காருஅடிகளார் ஏனைய செவ்வாடை சக்திகளுக்கும் மன்றங்களுக்கும் கைகாட்டும் ஆன்மிக மன்றங்களாக சுவிஸ் சுரேஷ் அவர்களின் தலைமைப்பொறுப்பில் வழிநடாத்தும் சுவிஸ் மேல்மருவத்தூர் அருள்மிகுஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு வாரவழிபாட்டு மன்றங்கள் திகழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சக்தியே சாதிக்கும் தன்மைகொண்டது!
ஓம்சக்தி! ஆதிபராசக்தி!