இயற்கை விவசாயச் செயற்றிட்டம்
#SriLanka
#Kilinochchi
#Event
#Lanka4
Kanimoli
2 years ago

கிளி/திருவையாறு மகா வித்தியாலயத்தின் முதல் மாணவனும் இயற்கை விவசாய அபிவிருத்தி நிறுவன ஸ்தாபகரும் இயற்கை விவசாய ஆர்வலருமான திரு.பரமேஸ்வரன். சுதாகரன் அவர்கள் எமது பாடசாலையில் இயற்கை விவசாயச் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரு.ப.சுதாகரன் அவர்களின் தாயாரும் அவருடைய துணைவியாரும் கலந்து சிறப்பித்ததுடன்
இயற்கை விவசாயம் தொடர்பில் இந்தியா சென்று பயிற்சி பெற்ற கிளி/ கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. அம்பிகைபாகன் அவர்களும்
இயற்கை விவசாய அபிவிருத்தி உறுப்பினரும் கால்நடை உத்தியோகஸ்தருமான
திரு. சூரியகுமார் அவர்களும்
இயற்கை விவசாய அபிவிருத்தி நிறுவன ஊடகவியலாளர், எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.



