இராணுவ சீருடை, வாள் மற்றும் 5 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

#SriLanka #Arrest #Lanka4 #Sri Lankan Army #sri lanka tamil news
Prathees
3 years ago
இராணுவ சீருடை, வாள் மற்றும் 5 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

துப்பாக்கி தோட்டாக்கள்-5 , இராணுவ சீருடைகள் மற்றும் வாள்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 அம்பலாந்தோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி வீரகட்டிய, குடபந்திகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.

 சந்தேக நபர் குற்றச்செயல் செய்யும் நோக்கில் இந்த பொருட்களை வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 விதாரனதெனிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வீரகட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4