வடிவேலு பாடிய 'ராசா கண்ணு' பாடல்; ’மனதை என்னமோ செய்கிறது’ என நடிகர் சூரி டுவிட்!

#Cinema #Twitter #TamilCinema #Tamilnews #ImportantNews
Mani
3 years ago
வடிவேலு பாடிய 'ராசா கண்ணு' பாடல்; ’மனதை என்னமோ செய்கிறது’ என நடிகர் சூரி டுவிட்!

நடிகர் வடிவேலு பாடியுள்ள 'ராசா கண்ணு' பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்பாடல் குறித்து நடிகர் சூரி டுவிட் செய்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத்திரைப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

“ராசா கண்ணு”பாடல் கடந்த 19ஆம் தேதி வெளியானது. வடிவேலு பாடியிருக்கும் இந்தப்பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதி இருக்கிறார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பாடல் குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். மாமன்னன் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.    

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4