தனது இதயத்தினை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பெண்! விசித்திரமான உணர்வு என நெகிழ்ச்சி

#world_news #London
Mayoorikka
1 year ago
தனது இதயத்தினை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பெண்! விசித்திரமான உணர்வு என நெகிழ்ச்சி

பெண்ணொருவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் இருந்து அகற்றப்பட்ட தனது இதயத்தினை அருங்காட்சியகத்தில் சென்று ப்பார்வையிட்ட சம்பவம் ஒன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

 Jennifer Sutton என்ற பெண் 16 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் இருந்து அகற்றப்பட்ட தனது இதயத்தினை, லண்டனில் உள்ள Hunterian அருங்காட்சியகத்தில் சென்று பார்வையிட்டுள்ளார். 

 16 ஆண்டுகளுக்குப் பிறகு அருங்காட்சியகத்தில் தனது இதயத்தைப் பார்ப்பது ஒரு விசித்திரமான உணர்வு என்று ஜெனிபர் கூறியுள்ளார். 22 வயதுவரை உயிர் கொடுத்த தனது இதயப் பொக்கிஷத்தை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது பெருமையாக இருப்பதாக ஜெனிபர் கூறியுள்ளார்.

 ஜெனிபர் சுட்டன் பிரிட்டனின் ரிங்வுட் நகரில் வசிப்பவர், 2007 ஆம் ஆண்டில், இதய நோய் காரணமாக, மற்றொரு நபரிடம் இருந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

 இதையடுத்து அறுவைச்சிகிச்சையின் பின் அவரது இதயம் அருங்காட்சியகத்தில் வைக்க சம்மதித்தார். உடல் உறுப்பு தானத்தை செய்யவேண்டும் என்பதை ஊக்குவிக்கவே அவர் அருங்காட்சியகத்தில் தனது இதயத்தை வைக்கச் சம்மதித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!