கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்!

#SriLanka #Colombo #Batticaloa #Trincomalee #Province #Lanka4
Kanimoli
3 years ago
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள்  ஆரம்பம்!

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. டெர்மினல்களை நிர்மாணிப்பதால் மட்டும் துறைமுகம் உருவாகாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, குறிப்பிட்டார்.

 கிழக்கு முனையத்தின் முதல் கட்டப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஏனைய தனியார் டெர்மினல்களுடன் போட்டியிட்டு அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என நம்புவதாக நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4