பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

#SriLanka #Arrest #Sexual Abuse #students
Prasu
3 years ago
பாடசாலை மாணவிகளை பாலியல்  துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மற்றொரு ஆசிரியர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் நடைபெறும் மாலை வகுப்பு ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரால் கடந்த ஜனவரி மாதம் முதல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் 6 சிறுமிகளின் பெற்றோர் இது தொடர்பில் பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 இதேவேளை, தமது பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய சில பெற்றோர்கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4