அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

#SriLanka #prices #Food
Mayoorikka
3 years ago
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

 இதன்படி, 400 கிராம் பால் மா (லங்கா சதொச) பொதியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும்.

 1 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1350 ரூபாவாகும். ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

 1 கிலோ சோயா மீட்டின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 660 ரூபாவாகும். 1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுன் அதன் புதிய விலை 129 ரூபாவாகும்.

 1 கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 239 ரூபாய் லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4