வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சாலை விபத்தில் பிரபல டிவி நடிகை மரணம்!

#Cinema #Death #TamilCinema #Tamilnews
Mani
3 years ago
வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சாலை விபத்தில் பிரபல டிவி நடிகை மரணம்!

இந்தியில் சாராபாய் Vs சாராபாய் என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் வைபவி உபத்யா. தீபிகா படுகோனுடன் இணைந்து 'சப்பக்' என்ற படத்திலும் சமீபத்தில வெளியான 'டிமிர்' என்ற படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் கடந்த திங்கட் கிழமை தனது வருங்கால கணவருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலு மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் பயணித்த கார் மலைப்பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். வைபவியுடன் காரில் சென்ற அவரது வருங்கால கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4