இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

#SriLanka #Parliament #Sajith Premadasa
Mayoorikka
3 years ago
இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 இந்நிலை நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் கூட பாதிப்பதாகவும், குறித்த ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டால், அங்கு பணிபுரியும் மக்களின் தொழிலுக்கு என்ன நடக்கும் என நினைத்துப் பார்க்க முடியாதுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 இன்றைய சபை அமர்வில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பிய போதேஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4