கல்வியே ஆயுதம் கல்வியால் உயர்வோம்
ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மை இனம், மதம், சாதி, நிறம் ஒடுக்கப்படுவது பூவும்குள் கருகும் கனியாக எழுதப்படாத சட்டமாகும்.
ஆதிக்க வர்க்கம் என்ன செய்தாலும் அதை ஒட்டி வாழும் அடுத்த வர்க்கம் ஆதரிக்கிறது. அதில் முழைத்த தினம்தான் முள்ளிவாய்க்கால் தினம். இப்படி எத்தனையோ முள்ளி வாய்க்கால்கள் இவ்வுலகில் இருக்கின்றன.
மேலும் உருவாகப்போகின்றன. அவை மேலும் அபாயகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதில் நடந்துகொண்டிருக்கும் உக்ரையின் போரும் உதாரணம். நாம் என்ன செய்யவேண்டும் நம்மைக் காக்க? தமிழர்கள் சிந்திக்கவேண்டிய விடயம் சிந்தித்து பார் தமிழா.
உலகில் பல சிறிய இனங்கள் உலகில் உன்னத நிலையை அடை ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்கள் எடுத்த ஆயுதம் கல்வி. ஆம் கல்வியே ஆயுதம். கல்விமான்களை அழிக்க வல்லரசுகள் முன்வராது காரணம் அவர்கள் அறிவு இவரகளுக்கு தேவை.
அறிவாளிகளை அழித்தால் தாம் அழிவோம் என்பது அவர்கழும்கு தெரியும். பன்மொழிக்கல்வியோடு அறிவான நாடுகள் அழிக்கப்பட்ட வரலாறு இல்லை. உலகில் பல சிறுபான்மை இனம் அழிக்கப்படாமல் இருப்பதர்க்கு கல்வி அறிவே அரணாகவும் பலமாகவும் உள்ளது.
ஆம் தமிழ் இனம் அழிக்கப்படாமல் இருக்க கல்வி என்ற ஆயுதமே உகந்தது. கல்வி அறிவு இருந்தால் பணம், ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, ஒழுக்கம், ஓய்வின்றிய உழைப்பு தானாக வரும்.
உலக நாடுகளில் அகதியாக சென்று எம்மின அடுத்த தலைமுறை பல துறைகளில் சாதித்து வருவதை இலங்கையிலும் கடைப்பிடிப்போம்.
இலங்கையை மட்டுமல்ல உலகத்தையே தமிழர்கள் ஆளலாம்.
SHELVA-SWISS