இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயாராகும் ரஷ்யா!

#SriLanka #Russia #Power
Mayoorikka
3 years ago
இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயாராகும் ரஷ்யா!

இலங்கை அரசாங்கம் அனுமதியளித்தால் இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

 இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 110 மெகாவாட் அணு மின் உற்பத்தி நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

 அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுமாயின், அதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க தமது நாட்டு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4