கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தத்தா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

#Actress #TamilCinema
Mani
3 years ago
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தத்தா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகை மேனகாவின் மகளான இவர் ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது நடிப்பும், கேரக்டரும் அதிக கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசரா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்தகீர்த்தி சுரேஷ், ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் ‘ரகு தத்தா’ படத்திலும் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள படம் 'ரகு தத்தா'.

‘ரகு தத்தா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு கீர்த்தி சுரேஷுடன் கேக் வெட்டி கொண்டாடியதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளை முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4