முருகப்பெருமானுக்கு முருகன் என்ற பெயர் வர காரணமாயமைந்த புராணக் கதை.
சைவ சமயத்தில் வணங்கப்படும் தெய்வங்களில் முருகப்பெருமானை ஏன் நாம் முருகன் என்று செல்லமாக வணங்குகிறோம் என்று கேட்பவர்களுக்கு இப்பதிவு ஒரு பதிலைத் தரும்.
சிவ பெருமானிடம் பல சக்தி வாய்ந்த வரங்களைப் பெற்று, தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மனை வதம் செய்வதற்காகவே முருகப் பெருமான் அவதாரம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதே போல் ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால் தான் கோபம் கொண்டு முருகப் பெருமான் பழநியில் ஆண்டிக் கோலத்துடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தியானத்தில் இருந்த சிவன் மீது காதல் பானத்தை ஏவினான் மன்மதன். இதனால் கோபமடைந்த சிவ பெருமான், தனது நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.
சிவனின் கோபம் தணிய அவரின் கால்களில் விழுந்து வணங்கினால் பராசக்தி, மன்மதனை எரித்த அதே கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறுப்பொறிகள் சரவண பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆகியன.
இந்த குழந்தைகள் மன்மதனை போன்ற அழகுடன் காணப்பட்டன. ஆனால் மன்மதன் கருமை நிறம் உடையவன். இந்த ஆறு குழுந்தைகளும் சிவப்பு நிறத்தில் ஜொலித்தன.
இதன் காரணமாகவே மன்மதனை கருவேள் என்றும், முருகனை செவ்வேள் என்றும் குறிப்பிடுவார்கள். வேள் என்ற சொல்லுக்கு அழகானவன் என்று பெயர். இதை குறிக்கும் வகையிலேயே முருகன் என்ற திருநாமமும் உண்டாயிற்று.
அதையே மாவடி வைகும் செவ்வேள் போற்றி.... எனப் பதிகம் பாடுகிறோம்.