கருடனினதும் சக்கராயுதத்தினதும் ஆணவத்தினை ஒடுக்கிய கிருஷ்ணர் - புராணக் கதை

#God #spiritual #Lanka4 #ஆன்மீகம் #லங்கா4
Mugunthan Mugunthan
11 months ago
கருடனினதும் சக்கராயுதத்தினதும் ஆணவத்தினை ஒடுக்கிய கிருஷ்ணர் - புராணக் கதை

கருடனும், சக்கராயுதமும் ஒரு முறை நாம் இருவரும் இல்லை என்றால் கிருஷ்ணபகவானால் எதையும் செய்ய முடியாது என இறுமாப்பு கொண்டனா்.

 இதை அறிந்த கிருஷ்ணர் இவர்களுக்கு தகுந்த பாடம் போதிக்க எண்ணினார்.

 அப்போது காற்றில் கலந்து வந்த குபேரன் நந்தவனத்திலுள்ள சவுகந்திகா மலரினை நுகர்ந்து கொண்டார். உடனே அவருக்கு ஒரு திட்டம் எட்டியது.

 கருடனை அழைத்து குபேரன் நந்தவனத்தில் இருக்கும் சவுகந்திகா மலரை பறித்து வரும் படி கட்டளையிட்டார். நந்தவனத்திற்கு வந்த கருடனைப் பார்த்து யார் என்ன செய்கிறிர்கள் என காவல் காத்துக்கொண்டிருந்த அனுமன் கேட்டார். 

நான் தான் கருடன். பரமாத்மா தான் என்னை அனுப்பி இங்குள்ள மலர்களை பறித்து வரச் சொன்னார் என ஆர்ப்பாட்டம் செய்தது. அதற்கெல்லாம் அனுமதி கிடையாது என்றார் அனுமன். 

அவரிடம் சண்டைக்கு முயன்ற கருடனை பிடித்து தனது கை இடுக்கில் வைத்து கொண்டு வா உன்னை அனுப்பிய பரமாத்மாவிடமே போய் நியாயம் கேட்கலாம் என சொலிலிக்கொண்டே துவாரகை நோக்கி வந்தார் அனுமன்.

 அவர்களைப் பார்த்த மக்கள் பீதியில் கிருஷ்ணரிடம் விபரத்தை கூறினர்.

 அவரும் அதனைத் தெரியாத வண்ணம், யாரோ குரங்கு முகமும் மனித உடலும் கொண்ட ஒருவன் கருடனை பிடித்து வருகிறானாம். அங்கு சென்று அவரை விடுவித்து வா என சக்கராயுதத்திடம் கட்டளையிட்டார்.

 அதுவும் சென்று அனுமனை மிரட்டியது. எனக்கு தெரிந்த பரமாத்மா ராமபிரான் ஒருவரே. வேறு யாரையும் எனக்கு தெரியாது. நீயும் கிருஷ்ணருடைய ஆள் தானா என சொல்லிக்கொண்டு அவரையும் மற்றைய கையிடுக்கில் வைத்துக்கொண்டு நேரே கிருஷ்ணரிடம் வந்தார்.

 கருடன், சக்கரமும் தன்னைவிட பலசாலி ஒருவர் உள்ளார் என்பதை அனுமன் பிடியால் அவதிப்பட்ட போது உணர்ந்தார்கள். இருவரினது தலைக்கணமும் அகன்றது.

 கிருஷ்ணர் முன் சென்ற அனுமனுக்கு அங்கு இருப்பது யாரென்று தெரியவில்லை. அதற்கு மேல் சோதிக்க விரும்பாத கிருஷ்ணர் ராமனாக காட்சி தர அனுமனும் மகிழ்ந்தார்.