சித்தார்த் அடுத்து 6 படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளார்
கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கிய சித்தார்த் டக்கர் படத்தில் நடித்துள்ளார். இதில் திவ்யன்ஷா கதாநாயகியாகவும், யோகி பாபுவும் நடித்துள்ளார். மேலும் 6 படங்கள் அவர் கைவசம் உள்ளன.
சித்தார்த் அளித்த பேட்டியில், தான் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாக, அவர் நிறைய அனுபவங்களைப் பெற்றார். கொரோனாவால் எனது படங்கள் வெளியாகவில்லை. தற்போது டக்கர் படம் தமிழ், தெலுங்கில் வர இருக்கிறது.
நான் நடித்த மேலும் 6 படங்கள் விரைவில் வெளியாக உள்ளன, அதில் ஒன்று இந்தியன் 2. 20 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் ஷங்கருடன் மீண்டும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்துகளை வெளியிட்டு வந்தேன். சமூகத்தில் அநீதி நடக்கும்போது கோபப்படுகிற பின்னணியில் இருந்து வந்ததால் அப்படி செய்தேன்.
என்னை நம்பி நிறைய தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியானேன். இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். டக்கர் கமர்ஷியல் படம். காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாமே இருக்கும். கார் ரேஸ் போல கதை வேகமாக நகர்கிறது. சண்டைக் காட்சிகளில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். மேலும் ஒரு படம் தயாராக உள்ளது என்றார்.