கவினுக்கு ஜோடியாகும் 'அயோத்தி' படத்தில் நாயகியாக நடித்த பிரீத்தி அஸ்ரானி ஒப்பந்தம்

#Cinema #Actor #TamilCinema
Mani
3 years ago
கவினுக்கு ஜோடியாகும் 'அயோத்தி' படத்தில் நாயகியாக  நடித்த பிரீத்தி அஸ்ரானி ஒப்பந்தம்

'டாடா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் கதா நாயகனாக நடிக்க உள்ள புதிய படம் பற்றியதகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான "அயோத்தி" படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி, இந்த படத்தில் கவின் ஜோடியாக நடிக்கிறார். மேலும் பல நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். பிரபல நடன இயக்குனரான சதீஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நடனக் கலைஞராகத் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னர் திரைப்படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 கவின் இப்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார், அதற்கு அனிருத் இசையமைக்கிறார். கவின் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைக்கிறார். இன்றைய தலைமுறையின் கதையை சொல்லி இளைஞர்களை கவரும் வகையில் இப்படம் கமர்ஷியல் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹரிஷ் ஒளிப்பதிவு செய்ய, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4