லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் விரைவில் திருத்தம்

#SriLanka #prices #Laugfs gas #Litro Gas #Lanka4 #sri lanka tamil news #Gas
Prathees
3 years ago
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் விரைவில்  திருத்தம்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் விரைவில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இதேவேளை, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

 கடந்த 3ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலை திருத்தத்தின் போது எரிவாயு விலை குறைக்கப்பட்டது.

 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

 இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,638 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,462 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 681 ரூபாவாகவும் காணப்படுகிறது.

 நாளை நள்ளிரவு இடம்பெறும் விலை திருத்தத்தின் பின்னர், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3இ238 ரூபாவாக குறைவடையவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4