ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடருக்கான பிரதித் தலைவர் பதவியை இலங்கை பெற்றுள்ளது.

#SriLanka #UN #Lanka4 #President
Kanimoli
3 years ago
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடருக்கான பிரதித் தலைவர் பதவியை இலங்கை பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடருக்கான பிரதித் தலைவர் பதவியை இலங்கை பெற்றுள்ளது. இலங்கையின் பிரதித் தலைவர் பதவிக்கு 193 நாடுகள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கான பொருத்தமான பதவியை ஏற்பார்.

 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரதித் தலைவர் பதவிக்கு இவ்வருடம் இலங்கைக்கு மேலதிகமாக 21 நாடுகள் தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடர் செப்டம்பர் 12ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4