தங்கலான் படப்பிடிப்பு மீண்டும் தொடர்கிறது

#Cinema #Actor #TamilCinema
Mani
3 years ago
தங்கலான் படப்பிடிப்பு மீண்டும் தொடர்கிறது

விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் விக்ரம் விலா எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விக்ரம் காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததால் படப்பிடிப்பில் தற்காலிக இடைநிறுத்தம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது விக்ரம் முழுமையாக குணமடைந்து மீண்டும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பை தொடங்க தயாராகிவிட்டார்.

வரும் 15ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்.

தங்கலானில், விக்ரம் ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் அவரது தோற்றம் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

கோலார் தங்க வயல் உருவாவதற்கு முன்பு அந்த நிலத்தில் இருந்த தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றிய கதையாக இந்த படம் தயாராவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4