10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டுக்கட்டு கணக்கு நீக்கம்
சென்னை
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது. சீட்டுக்கட்டு தொடர்பான விளையாட்டு பாடப்புத்தகத்தில் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை தடைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக தமிழ்நாடு ஆளுநரும் அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து பள்ளி பாடப்புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான சில வகுப்புகளில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தன.
6ம் வகுப்பில் இதுதொடர்பாக இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பாடப்பகுதி ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது 10ம் வகுப்பு கணித பாடத்தில் ஃபிளையிங் கார்ட்ஸ் சம்ஸ் என்ற பிரிவில் சீட்டுக்கட்டு கணக்குகள் இடம்பெற்றுள்ளது.
இந்த கணக்குப்பகுதியானது கடந்த கல்வியாண்டில் அமலில் இருந்த நிலையில் வரக்கூடிய கல்வியாண்டில், பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலாக வேறு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.