எஸ்.ஜே.சூர்யாவுக்கு நிறைய படத்தின் வில்லன் வாய்ப்புகள்

#Cinema #Actor #TamilCinema #Film
Mani
3 years ago
எஸ்.ஜே.சூர்யாவுக்கு நிறைய படத்தின் வில்லன் வாய்ப்புகள்

வாலி, குஷி, ஆகிய படங்களின் மூலம் இயக்குனராகப் புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்தார். இப்போது அவர் வில்லன் நடிகராக மாறி இருக்கிறார்.

ஏற்கனவே விஜயின் மெர்சல் படத்தில் வில்லனாக வந்தார். சிம்புவின் மாநாடு படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். இதில் அவரது வில்லத்தன நடிப்பு பேசப்பட்டது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா-2 படத்தில் லாரன்ஸ் வில்லனாகவும், மார்க் ஆண்டனி படத்தில் விஷால் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

 ஷங்கர் இயக்கதில் தமிழ் மற்றும் தெலுங்கு தயாராகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் வில்லனாக நடிக்கிறார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இதனால் வில்லன் வேடங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளதால் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4