'கஸ்டடி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

#Cinema #Actor #Actress #TamilCinema
Mani
3 years ago
'கஸ்டடி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா முக்கிய வேடத்தில் நடித்த 'கஸ்டடி' திரைப்படம் மே 12ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சரத்குமார் வென்னேலா கிஷோர் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில், 'கஸ்டடி' திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கஸ்டடி' திரைப்படம் நாளை ஜூன் 9 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4